ராணாவைவிட கோச்சடையானே எனக்கு ரொம்பவும் பிடிச்சது: ரஜினி
ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது,
எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்பவும் பிடிக்கும். ரசிகர்களுக்காக நிறைய படங்கள் பண்ணியிருந்தால்கூட, இதுவரை ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.
இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில்கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் 'ராணா' படத்தை தொடங்க முடிவு செய்தேன்.
அந்தப் படத்தோட கதை எனக்குள் 20 வருஷமா ஓடிக்கொண்டு இருந்தது.
அந்தப் படம் தொடங்கின நேரத்துலதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சுன்னு உங்களுக்கே தெரியும். ஆஸ்பத்திரியில சிகிச்சை முடிஞ்சு திரும்பி வந்தாலும், இந்த கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியல.
ஒருநாள் முரளி மனோகர் எனக்கு போன் செய்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவுக்கு பதிலா 'கோச்சடையான்' னு ஒரு கதை பண்ணியிருக்கிறார், கேட்டுப் பாருங்கனு சொன்னார். இப்போ பண்ண முடியாது, 2 வருஷமாவது ஆகும்னு சொன்னேன்.
நீங்க முதல்ல அதை கேளுங்க. அப்புறம் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்னு சொன்னார்.
ராணாவைவிட எனக்கு கோச்சடையான் கதை ரொம்பவும் பிடிச்சது. ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட கேட்டேன். நீங்க சரின்னு சொன்னா வேற ஒரு ஐடியா இருக்கு.
'சுல்தான்'னு ஒரு அனிமேஷன் படத்தை செளந்தர்யா பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது.
அதில எனக்கு நம்பிக்கை வேற இல்லை.
இந்த படத்தை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பேரிடம் கருத்து கேட்டேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகும்னு சொன்னாங்க. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு அவங்க சொன்னாங்க.
உடனே செளந்தர்யாகிட்ட பேசினேன். இந்த படத்துக்காக உனக்கு பெரிய பொறுப்பு இருக்கும். பண்ண முடியுமான்னு கேட்டேன்.
அவங்க உடனே நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம் தான்.
நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.
செளந்தர்யா, ஐஸ்வர்யா இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப ரெண்டு பேரும் படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர்தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். இன்னும் ஐஸ்வர்யா, செளந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும்.
குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு வருகிற வரைக்கும் நல்லபடியா அவங்களை வளர்க்கணும். அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி கேட்பாங்க.
2 குழந்தைகளை பெற்று என்கிட்ட கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படிங்கிறது எனது கருத்து.
செளந்தர்யாவை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க முதல்ல ஆக்ஷன் அப்படினு சொன்னப்போ எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் ரவிக்குமார் சார் நீங்க வாங்க. இவரு ஆக்ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்கனு சொன்னேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment