சைவம் படத்தின் மூலம் பாடகியான உன்னி கிருஷ்ணன் மகள்
தலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படம் ‘சைவம்’. இப்படத்தில் நாசர், பேபி சாரா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தில் நா.முத்துக்குமார் வரிகளில் உருவான ‘அழகே... அழகே’ என்ற பாடல் சமீபத்தில் பதிவானது.
இப்பாடலை பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகரான உன்னிக்கிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன்.
இப்படத்தில் நடிக்கும் பேபி சாராவுக்கு பொருத்தமான குரல் வேண்டும் என்று இயக்குனர் தேடிக் கொண்டிருந்த வேளையில்தான், உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ராவின் குரல் பொக்கிஷமாக அவருக்கு கிடைத்துள்ளது.
இப்பாடல் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்கள். அதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல என்று கூறினார்.
உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் உருவான இப்பாடலின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment