ஏப்ரல் 20 ஆம் தேதி ரஜினியின் புதிய படம் துவக்கம்

No comments
கோச்சடையான் படத்தின் வெளியீட்டு தேதியே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தன் அடுத்தப் படத்தை உடனே துவங்குகிறார் ரஜினி. இந்த செய்தி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளது. ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை ஷங்கர் இயக்குவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிகுமார்தான். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் அனுஷ்கா மற்றொருவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா. இருவரிடமும் நடந்த பேச்சுவார்த்தையில் அனுஷ்கா கால்ஷீட் ஓகே. சோனாக்ஷி சின்கா கால்ஷீட்டில் சிறு பிரச்சனைகள் இருப்பதால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்தின் கதை, வசனத்தை பொன். 
குமரன் எழுதுகிறார். பிரியாமணி நடிப்பில் கடந்த வருடம் வெளியான சாருலதா என்ற படத்தை இயக்கியவர்தான் பொன்.குமரன். இவரது கதைக்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். எந்திரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். கன்னடத்தில் பிரபலமான தயாரிப்பாளரும், தமிழில் மஜா போன்ற படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார்.
 ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தாலும் இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை முழுக்க முழுக்க கவனிப்பவர் நடிகர் அருண்பாண்டியன்தான். ஐங்கரன் இண்டர்நேஷனலில் பார்ட்னராக இருந்த அருண்பாண்டியன் அங்கிருந்து விலகி ராக்லைன் வெங்கடேஷ் நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். ரஜினியிடம் கால்ஷீட் வாங்கியது கூட அருண்பாண்டியன்தான். ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மைசூரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

No comments :

Post a Comment