அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை! சமந்தாவின் அவசர டுவிட்!!

No comments
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், நடிகர்-நடிகைகளை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நடிகை சமந்தாவின் தந்தை ஆந்திராவிலுள்ள ஜெகன்மோகன் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படப்போவதாகவும், அதனால் அக்கட்சிக்காக சமந்தா தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாகவும் ஆந்திராவில் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து ஆந்திராவிலுள்ள மீடியாக்கள் சமந்தாவை அணுகி விவரம் கேட்டபோது, அப்படியா, இந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது. 
தற்போது ஒரே நேரத்தில் 5 படங்களில் நடித்துக்கொண்டிருககும் எனக்கு ஆந்திராவில் போட்டியிடும் வேட்பாளர்களே யார் யார் என்பது தெரியாது. அந்த அளவுக்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறேன். அப்படியிருக்க நானாவது , கட்சிக்காக பிரசாரம் செய்வதாவது என்று அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டாராம்.
 அதையடுத்து சமீபகாலமாக தனக்கு தோன்றும் விசயங்களை தனது டுவிட்டரில் தவறாமல் பதிவு செய்து வரும் சமந்தா, இந்த விசயத்தையும் உடனடியாக பதிவு செய்து தன்னைப்பற்றிய எழுந்துள்ள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம். அதோடு, எனக்கு எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யும் எண்ணமும் இல்லை, எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment