அஞ்சான் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார் கரீனா கபூர்!
கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே நடித்திருப்பதையடுத்து, மேலும் சில நடிகைகளுக்கும், தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கி வருகிறது. ஆனால் முன்னணி ஹீரோக்களின் படங்கள், சரியான சம்பளங்கள் அமையாததால் சிலர் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் சமந்தா முக்கிய நாயகியாக நடித்தபோதும், இப்போது இன்னொரு முக்கிய ரோலுக்காக கரீனா கபூரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
விஜய் நடித்த தலைவாவைப் போன்று இப்படமும் மும்பை கதை களத்தில் உருவாவதால் அப்படத்தில் இன்னொரு நாயகியாக இந்தி நடிகை ராகினி நடித்தது போன்று இந்த படத்தில் கரீனா நடிக்கிறாராம்.
தற்போது இந்தி படங்களில் கரீனாகபூர் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால், அவரது கால்சீட்டுக்காக காத்திருந்தவர்கள், திடீரென்று அவர் கொடுத்ததும், மும்பையில் லொகேஷனிலேயே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்கி விட்டர்களாம்.
இதையடுத்து, இதுவரை தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த கரீனா, இதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் தமிழில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment