தேர்தலில் போட்டியிடும் தமிழ் நடிகை!

No comments
வருகிற பாராளமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு நடிகர், நடிகைகூட போட்டியிடவில்லை. நடிகர் கார்த்திக் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஒரு நடிகை போட்டியிட இருக்கிறார். உறங்காத கண்கள், நிலவே மலரே, செவ்வந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரஜினி நிவேதா. தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த இவர் தற்போது தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் (?) தென்சென்னை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்தார்.
 வங்கி கணக்கு தொடர்பான டாக்குமெண்டுகள் சரியாக இல்லாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளவில்லை. ஏமாற்றத்துடன் வெளியில் வந்த ரஜினி நிவேதா. “நான் இந்த தொகுதியல் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறேன். அவசர அவசரமாக வந்ததால் டாக்குமெண்டுகளை சரிபார்க்கவில்லை. நாளை எல்லா டாக்குமெண்டுகளுடனும் முறையாக வேட்புமனு தாக்கல் செய்வேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்

No comments :

Post a Comment