இனி செய்தி வாசிப்பாளராக நடிக்க மாட்டேன்: கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். நிமிர்ந்து நில் படத்தின் மூலம் சினிமா நடிகராகிவிட்டார். இனி தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
நிமிர்ந்து நில் படத்திற்கும், அதில் நடித்த எனக்கும் தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருவது சந்தோசமாக இருக்கிறது. இயக்குனர் சமுத்திரகனி இரண்டு மாதங்கள் எனக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார். சின்னத்திரையில் நான் இயல்பாக செய்து வரும் வேலை என்பதால் எளிதாக நடிக்க முடிந்தது.
நிமிர்ந்து நில் படத்துக்கு பிறகும் சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராக நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன்.
நான் நானாக நடிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. அதனால் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் பிசியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் சின்னத்திரையை விட மாட்டேன் என்கிறர் கோபிநாத்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment