ஷங்கருடன் கைகோர்க்கும் அஜீத்!

No comments
மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றிக்குப்பிறகு மேல்தட்டு இயக்குனர்களின் கவனத்துக்கு வந்து விட்டார் அஜீத். அவரது வியாபார வட்டமும் அதிகரித்து விட்டதால், அவரை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் படம் பண்ணலாம் என்று ஷங்கர் உள்ளிட்ட டைரக்டர்கள் அஜீத் பக்கம் திரும்பியுள்ளனர். வீரம் படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கும் படத்தில் இரண்டு வேடங்களில நடிப்பதற்காக தன்னை தற்போது தயார்படுத்திக்கொண்டிருக்கும் அஜீத், சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினாராம். 
 அப்போது, தன்னிடமிருந்த ஒரு கதையை அஜீத்திடம், ஷங்கர் சொன்னபோது, அதில் நான் நடிக்கிறேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்தாராம் அஜீத். அதனால் தற்போது ஐ படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ஷங்கர், அடுத்து அஜீத்திடம் சொன்ன கதையை திரைக்கதை அமைப்பார் என்று தெரிகிறது.
 ஆக, இந்த மாதம் முதல் கெளதம் படத்தில் நடிக்கும் அஜீத், இந்த ஆண்டு இறுதியில் ஷங்கர் இயக்கும் படததில் நடிப்பார் என்று தெரிகிறது.

No comments :

Post a Comment