600 தியேட்டர்களில் மான்கராத்தே ரிலீஸ்!
சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே சூப்பர் ஸ்டாரின் பட ரேன்ஞ்சுக்கு எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கிறது. காரணம் சிவகார்த்திகேயனின் தொடர் வெற்றி, ஹன்சிகாவின் காதல் பிரேக்அப்பிற்கு பிறகு வெளிவரும் படம். ஏ.ஆர்.முருதாசின் கதை.
எப்படியும் காமெடிக்கு கியாரண்டி இருக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டை விட படம் நான்கு மடங்கு அதிக தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 4ந் தேதி படம் ரிலீசாகிறது.
தமிழ்நாடு முழுவதும் 350 முதல் 400 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. சென்னை நகரில் மட்டும் 30 தியேட்டர்களில் ரிலீசாகிறது. உலக நாடுகளில் 160 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. தென்னிந்திய மாநிலங்களையும் சேர்த்தால் மொத்தம் சுமார் 600 தியேட்டர்களில் ரிலீசாகிறது.
வளர்ந்து வரும் ஒரு புதுமுக நடிகரின் படம் இத்தனை அதிகமான தியேட்டர்களில் ரிலீசாவது இதுவே முதன் முறை என்கிறார்கள்.
ரிலீசுக்கு பிறகு கூடுதல் பிரிண்டுகள் தேவைப்பட்டால் அதற்கும் தயாராகவே இருக்கிறார்களாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment