இசை ஆல்பத்தில் பிரேம்ஜியுடன் குத்தாட்டம் போடும் அக்ஷயா!

No comments
கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அக்ஷயா, கலாபகாதலன், உயிரின் ஓசை, எங்கள் ஆசான், உயர்திரு 420 உள்பட பல படங்களில் நடித்தார். ஐம்பதுக்கும் ஆசை வரும், மன்மத ராஜ்யம், பட்டிக்காட்டு மாப்பிள்ளை, தசையினை தீச்சுடினும் படங்களில் நடித்துள்ளார். அவைகள் ரிலீசாகமால் நிற்கிறது. தற்போது புதிய வாய்ப்புகள் எதுவும் இல்லாத அக்ஷயா ஸ்மைல் ப்ளீஸ் என்ற தமிழ் மியூசிக் ஆல்பத்தில் பிரேம்ஜியுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். மகேஷ் என்பவர் தயாரித்து இயக்கி உள்ள இந்த ஆல்பத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. 
ஸ்ரீகாந்த் தேவா, போபோ சசி, பாடி உள்ளனர், தயா சைரஸ் இசை அமைத்துள்ளார். “தமிழில் இசை ஆல்பத்திற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை என்பது தெரியும். ஆனால் வருங்காலத்தில் இசை ஆல்பங்களின் மார்க்கெட் பெரிதாக இருக்கும். அதனை இந்த ஆல்பம் ஆரம்பித்து வைக்கும். முதல்கட்டமாக டி.விக்களிலும், யூ டியூப்பிலும் வெளியிட இருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் மகேஷ்.

No comments :

Post a Comment