7 மெகா வில்லன்களுடன் மோதுகிறார் ஆர்யா!

No comments
பெரும்பாலும் ஒரு படத்திற்கு ஒரு வில்லன்தான் இருப்பார். ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி போன்ற டைரக்டர்களின் படங்களில் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி இயக்கத்தில் இப்போது ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் மீகாமன் படத்தில் மொத்தம் 7 வில்லன்கள் இருக்கிறார்களாம்.அவர்கள் அத்தனை பேருடனும் சண்டை காட்சிகளில் நடிக்கிறாராம் ஆர்யா. 
 ஆர்யாவுடன் மோதப்போகும் அந்த வில்லன்கள் யார் யார்? என்று கேட்டால், ஆஷிஷ் வித்யார்ஜி, சிறுத்தை அவினாஷ், பாண்டியநாடு ஹரிஷ், தடையறத்தாக்க மஹா காந்தி மற்றும் சுதன்ஷி பாண்டே, அஷிதோஷ் ராணா, பிதாமகன் மகாதேவன் என ஒரு பெரிய பட்டியலே போடுகிறார்கள். இவர்கள் அனைவருமே மெகா வில்லன்கள் என்பதால், அனைவருக்குமே கதையில் முக்கியத்துவம் உள்ளதாம். அதனால் படம் முழுக்க இவர்களுடன் வரிந்து கட்டி மல்லுக்கட்டியிருக்கிறாராம் ஆர்யா.
 ஆக இதுவரை காதல், காமெடி என்று கலந்து கட்டி வந்த ஆர்யா, இப்படம் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் ஆவேச நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்

No comments :

Post a Comment