ஏப்ரல் 9ம் தேதி அஜீத்-கெளதம் மேனன் படம் துவக்கம் – அதிகாரபூர்வமான அறிவிப்பு!

No comments
‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 55-வது படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இது பற்றி தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் என்ன சொல்கிறார்? “ஆரம்பம் படத்தை தயாரித்த ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் அஜித்தின் 55-வது படத்தையும் தயாரிக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்கிறார். 
இந்தப்படம் வருகிற ஏப்ரல் 9- ஆம் தேதி புதன்கிழமை ஆரம்பமாக உள்ளது. அஜித்துடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.” என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். 
படம் தொடங்கும்போது அஜித் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுவதில்லை. அதுபோலவே அஜித்தின் 55 வது படமாக உருவாகவிருக்கும் இந்தப்படத்தின் தலைப்பும் அறிவிக்கப்படவில்லை.

No comments :

Post a Comment