மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் கானா பாலா!
யவராஸ் இண்டெர்நேஷனல் தயாரிக்கும் படம் ‘மொழிவது யாதெனில்’. இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ், ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
இந்தப் படத்துக்காக நித்யன் கார்த்திக் இசையமைபில் நிகரன் எழுதிய, ‘அட்டக்கத்தி… மொக்க பீசு…. வெத்துவேட்டு… சப்பகேசு…” என்கிற பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார்.
இந்தப் பாடல் பற்றி இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக் கூறுகையில், “இப்போது வரும் படங்களில் கானா பாலா, தவறாமல் ஒரு பாடலை பாடி நடித்து விடுகிறார்.
கானா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை அவரது பாடல்கள் உருவாக்கி தருகிறது.
அதே போல ‘மொழிவது யாதெனில்’ படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடலை பிரத்யேகமாக வெஸ்டர்ன் போக்கில் உருவாக்கி, அவரை பாட வைத்தோம்.
நிகரன் எழுதிய ”அட்டக்கத்தி… மொக்க பீசு…. வெத்துவேட்டு… சப்பகேசு…” என்கிற வரிகளில் துவங்கும் அந்தப் பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார்.
இந்தப் பாடல் அவருடைய பாடல்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்…” என்றார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment