சினிமாவில் கிங்காக வலம்வருவேன்! - சொல்கிறார் வடிவேலு

No comments
ஆரம்ப காலத்தில் கவுண்டமணி-செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் வடிவேலு. அப்படி படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் நம்பர்-ஒன் காமெடியனானார். ஆனால் எதிர்பாராதவிதமாக அரசியல் புயலில் சிக்கிக்கொண்ட வடிவேலுவின் மார்க்கெட் சரிந்ததையடுத்து, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் இப்போது முன்னணி காமெடியன்களாக தலையெடுத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது 49 ஓ படத்தில் கவுண்டமணியும், தெனாலிராமன் படத்தில் வடிவேலுவும், ஹீரோக்களாக நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்துள்ளனர். 
இந்த நேரத்தில் தற்போதைய முன்னணி காமெடியனான சந்தானமும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், வடிவேலு நடித்த தெனாலிராமன் வருகிற 18-ந்தேதி ரிலீசாகிறது. இதையடுத்து, வடிவேலு வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
 இந்தநிலையில், கவுண்டமணியும் மீண்டும் நாயகனாக நடித்திருப்பது பற்றி வடிவேலு கூறும்போது, அண்ணன் நடிப்பது நல்ல விசயம்தானே. அவர் ஒரு நல்ல தொழிலாளி. அவர் வந்தா நல்லதுதான்.
 மேலும். மற்ற காமெடியன்களும் ஹீரோக்களாக நடித்திருப்பது பற்றி எனக்கு எந்தவித பயமும் இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். அதோடு, யாரு ஒருத்தர் மற்றவர்கள் வருவதைப்பற்றி பயப்படுகிறரோ அவர் தோற்று விடுவார். மேலும், எனக்கு எனது நடிப்பு மீது முழு நம்பிக்கை உள்ளது. அதனால் தொடர்ந்து சினிமாவில் கிங்காக வலம் வருவேன் என்கிறார்.

No comments :

Post a Comment