கில்லி விஜய் பாணிக்கு மாறிய சித்தார்த்!

No comments
எப்படியாவது தன்னையும் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களை நம்ப வைத்து விட வேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுகிறார் சித்தார்த். அதற்காக காதலை மட்டுமே மையமாகக் கொண்ட கதைகளை சமீபகாலமாக தவிர்த்து வருபவர், தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், தன்னை கருப்பாக மாற்றிக்கொண்டு, கரடுமுரடான வில்லன்களுடன் சண்டை போடவும் தயாராக இருக்கிறேன் என்று தான் குஸ்தி கதைகளில் மட்டுமே நடிக்க ஆர்வமாக இருப்பதை சொல்லி வருகிறார் இந்த சூழ்நிலையில், அவர் நடித்து வெளியாகயிருக்கும் படம்தான் ஜிகர்தண்டா.
 இந்த படத்தில் டைரக்டராக நடித்துள்ள சித்தார்த், மதுரையில் அரிவாளை தூக்கிக்கொண்டு திரியும் நிஜ தாதாக்களின் கதையை படமாக்கும் பொருட்டு அவர்களை நோட்டமிட சென்ற இடத்தில் அவர்களுடன் மோதுவதுதான் கதை. அதுவும், கில்லி படத்தில் எப்படி முன்ன பின்ன தெரியாத இடத்தில் த்ரிஷாவை அந்த ஏரியா ரவுடியாக பிரகாஷ்ராஜ்டமிருந்து காப்பாற்றுவாரோ, அதேபோல், தான் மதுரைக்கு சென்ற இடத்தில் அந்த ஏரியா ரவுடிக்கு நிச்சயம் செய்த பெண்ணான லட்சுமிமேனனை காதலிப்பாராம் சித்தார்த். 
அதையடுத்து வில்லன் கும்பலுக்கும், சித்தார்த்துக்குமிடையே போர் ஆரம்பமாகுமாம். இதையடுத்து மதுரைக்காரர்களின் அரிவாளுக்கு இறையாகாமல் எப்படி லட்சுமிமேனனை அங்கிருந்து சித்தார்த் அபேஸ் பண்ணி வருகிறார் என்பதுதான் க்ளைமாக்சாம். ஆக, தனக்கு கிடைத்த ஆக்சன் ஹீரோ வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ள சித்தார்த், சண்டை காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். கில்லி விஜய் ரேஞ்சுக்கு சித்தார்த் ஆக்ட் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

No comments :

Post a Comment