விஜய்யின் எளிமையை வெளிச்சம் போட்டு காட்டிய சமந்தா!

No comments
இதுவரை தமிழ் சினிமாவில் எளிமை என்றால் அது ரஜினிதான் என்கிற அளவுக்கு நரைமுடி தாடியுமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர். அவரையடுத்து எளிமை என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் இப்போது அந்த பட்டியலில் விஜய்யும் இடம் பிடித்திருக்கிறார். அந்த இடத்தில் விஜய்யை இடம்பெறச் செய்திருப்பவர் கத்தி பட நாயகி சமந்தா. அதாவது, சாதாரணமாக முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு என்றாலே அங்கே பல கேரவன்கள் நிற்பது வாடிக்கையாகி விட்டது. ஒரு டேக்கில் நடித்து முடித்ததும் அவர்கள் கேரவனுக்குள் ஓடிச்சென்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அதற்பிறகுதான் வெளியே வருவார்கள்.
 மேலும், மதிய இடைவேளையில் ஒரு குட்டித்தூக்கம் போடவும் கேரவன்களை பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது கத்தி படத்தில் நடித்து வரும் விஜய், ஒரு ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் செல்வதில்லையாம். ஸ்பாட்டிலேயே சேர் போட்டு அமர்ந்து அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டேயிருக்கிறாராம். 
அதுமட்டுமின்றி தங்களைச்சுற்றி பல எடுபிடிகளை நிறுத்திக்கொண்டு பில்டப் கொடுக்கும் நடிகர்கள் மத்தியில் விஜய் தனக்கு குடை பிடிப்பதற்குகூட உதவியாளர் வைத்துக்கொள்வதில்லையாம்.
 இது கத்தியில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தாவுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளதாம். தமிழில் முன்னணி ஹீரோவாகி விட்டபோதும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், எளிமையாக அவர் இருப்பதைப் பார்த்து எனக்கு பெரிய ஆச்சர்யமாக உள்ளது என்று யூனிட் நபர்களிடம் கூறி வந்த சமந்தா, இப்போது அதை தனது டுவிட்டரிலும் வெளியிட்டு விஜய்யின் எளிமையை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

No comments :

Post a Comment