கனடாவில் ராஜபக்சே ஆதரவாளர்கள் விழாவில் திரிஷா பங்கேற்பு?

No comments
ஈழ தமிழர்களை படுகொலை செய்த ராஜ பக்சேவை கண்டிக்கும் விதமாக இலங்கைக்கு நடிகர் – நடிகைகள் போவதில்லை என முடிவு எடுத்துள்ளனர். அங்கு நடக்கும் இசை விழாக்களிலும் பங்கேற்காமல் பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகிறார்கள். மீறி செல்வோருக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. இதுபோல் வெளிநாடுகளிலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை தமிழ் திரையுலகினர் புறக்கணித்து வருகிறார்கள். ஆனால் நடிகை திரிஷா தடையை மீறி ராஜபக்சே ஆதரவாளர்கள் விழாவில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 கனடாவில் இந்த விழா நடந்துள்ளது. அங்குள்ள தமிழர் அமைப்பு ஒன்று இந்த விழாவை நடத்தி உள்ளது. இந்த அமைப்பில் இருப்பவர்கள் ராஜபக்சேவுக்கு நெருக்கமாக உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என மற்ற தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இவர்கள் நடத்திய விழாவில் திரிஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார். அவரை தமிழ் அமைப்புகள் கண்டித்து உள்ளன.

No comments :

Post a Comment