சுஜிபாலாவுக்கு கொலை மிரட்டல் விடவில்லை: டைரக்டர் ரவிக்குமார் அறிக்கை

No comments
சினிமா டைரக்டர் ரவிக்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– என் மனைவி சுஜிபாலா பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடிதாகவும், என்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் படித்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன். அவர் கூறியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, உணமைக்கும் புறம்பானவை.
 எனக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் மட்டுமல்ல, திருமணமும் நடந்தது என்பதே உண்மை. இதை என்னால் நிரூபிக்க முடியும். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. அவற்றை வெளியிடுவேன் நான் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியிருப்பது தவறானது. 
உண்மையில் அவரது பெற்றோர்தான் குறிப்பாக, அவரது தாயார் இந்திராதான் ஒவ்வொரு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறபோதும், என்னை ஆளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.
 நான் அவரை அடித்து உதைத்ததாக சுஜிபாலா கூறியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் நான் அவரது தவறான நடவடிக்கைகளுக்காக பலமுறை கண்டித்துள்ளேன் என்பது உண்மை.
 ஆனால் அடிக்கும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல. மூன்று திரைப்படங்களை (உண்மை, இன்றைய செய்தி, லவ் பண்ணலாமா வேண்டாமா) தயாரித்தும், இயக்கியும் வருகிற நான் பெண்களுக்கு எத்தகைய மரியாதையையும், கவுரவத்தையும் வழங்குவேன் என்பதை அதில் நடித்த நடிகைகளையும், பெண் கலைஞர்களையும் நீங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவருக்கு கார், பங்களா, தோட்டம் வாங்கித் தந்ததெல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார்.
 நான் வாங்கித் தந்ததற்கான ஆதாரங்களை வைத்திருக்கறேன். ‘உண்மை’ திரைப்படத்தையே முடிக்க முடியாத அளவுக்கு நான் மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருப்பவன் என்றும், நான் எப்படி வீடு வாங்கித் தந்திருக்க முடியும் என்றும் சுஜிபாலா கேட்டிருக்கிறார். 
‘உண்மை’ திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதே சுஜிபாலாவால்தான். அவர்தான் இந்த படத்தின் கதாநாயகி. படப்பிடிப்புக்கு அழைத்த போதெல்லாம் அவரை அனுப்ப மறுத்து, அவரது தாயார் அவரை மறைத்து வைத்ததே படம் தாமதமானதற்குக் காரணம். 
அவர் தேதி கொடுத்தால், உடனே படப்பிடிப்பைத் தொடங்க நான் தயாராகவே இருக்கிறேன். நான் ஏற்கனவே திருமணமானவன் என்றும், எனக்கு குழந்தைகள் உள்ளனர் என்றும் ஏதோ புதிய கண்டுப்பிடிப்பைப் போல கூறுகின்றார். 
எனக்குத் திருமணம் ஆனதும், விவாகரத்துக்குப் பின் நான் பிரிந்து வாழ்வதும் தெரிந்துதானே அவர் எனக்குக் கழுத்தை நீட்டினார்? இப்போது புதியதாக ஏதோ பேசுவதன் காரணத்தை அவரும், அவரது தாயாரும்தான் விளக்க வேண்டும். சுஜிபாலாவுக்கு இருந்த சில தவறான தொடர்புகளை மறைத்து அவர்கள்தான் எனக்கு தீங்கு செய்திருக்கிறார்கள். 
 அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்க என்னால் முடியும். இதற்கான புகைப்பட ஆதாரங்கள், சாட்சிகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை வெளியிடத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment