சமந்தா அரசியல் பிரவேசம்?: மோடிக்கு ஆதரவு தெரிவித்தார்
சமந்தா அரசியலில் ஈடுபடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ‘நான் ஈ’, ‘பானா காத்தாடி’, ‘நீ தானே என் பொன் வசந்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஜோடியாக கத்தி, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படங்களில் நடிக்கிறார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ளன. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
அவர் கூறும் போது, தேர்தலில் அனைவரும் ஓட்டு போட வேண்டும். நல்ல ஆட்சியாளரை தேர்வு செய்ய இது தான் சரியான நேரம் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ‘நமது நாட்டுக்கு நரேந்திர மோடி போன்ற திறமையான தலைவர் தேவை. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர். அவர் நல்லாட்சி தருவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து ’ என்றார்.
இதன் மூலம் சமந்தா அரசியலில் குதிக்க தயாராவதாக கூறப்படுகிறது. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment