செக்கச்செவேர்ன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கு மீனாட்சி தீட்ஷித்! -வடிவேலு

No comments
தெனாலிராமன் படத்தில் வடிவேலு நடிக்க ஆயத்தமானபோது கோலிவுட்டிலுள்ள பல முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டனர். ஆனால், வடிவேலு என்றதும் அத்தன நடிகைகளும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினர். அதற்கடுத்து, வடிவேலுவைப்பற்றிய சங்கதி தெரியாத நடிகையாக கொண்டு வருவோம் என்று மும்பையில் இருந்தும் சில நடிகைகளை கூட்டி வந்தனர். ஆனால், அப்படி வந்த சில நடிகைகளிடம், கோடம்பாக்கத்தில் உள்ள சிலர் அப்படி இப்படி போட்டுக்கொடுத்து அவர்களை சொல்லாமல் கொள்ளாமல் மும்பைக்கே ஓட்டம் பிடிக்க வைத்தனர். 
 ஆனால், அப்படி வந்தவர்களில், எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. வடிவேலுவுடன் நடித்தே தீருவேன் என்று தில்லாக நின்ற ஒரே நடிகைதான் மீனாட்சி தீட்ஷித். இவருடன் நடித்த அனுபவம் பற்றி வடிவேலு கூறுகையில், இந்த படத்துக்கு மீனாட்சி ஓ.கே ஆனதும், எனக்கு ஒரே பயம். இந்த புள்ளையையும் எதையாச்சும் சொல்லி ஓட வச்சிடக்கூடாதேன்னு பதட்டமா இருந்துச்சு. 
 அது ஒருபக்கமிருக்க, என்னை நேருல பாத்தா அந்த புள்ள எங்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிடுமோங்கிற இன்னொரு பயமும் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு. அதனால, முதல் நாள் படப்பிடிப்புக்கு வர்றது வரை மீனாட்சி தீட்ஷித் கண்ணுல நான் படவே இல்லை.
புல் மேக்கப்போட்டு, அந்த மன்னர் கெட்டப்போடதான் அவருக்கு காட்சி கொடுத்தேன் அதனால் என்னோட சுயரூபம் அந்த புள்ளைக்கு தெரியாம போச்சு. அதுவும் இல்லாம சுமமா சொல்லக்கூடாது புள்ள, நல்ல செக்கச்செவேர்னு தக்காளி பழம் மாதிரி இருக்கு. 
நானோ தார் ரோடு மாதிரி இருக்கேன். ஆனாலும் அந்த புள்ள பெரிய மனசு பண்ணி எங்கூட நடிச்சிருக்கு. ரொம்ப நல்லாவும் நடிசசிருக்கு, அதனால் மீனாட்சிக்கு நான்தான் நன்றி சொல்லனும் என்கிறார் வடிவேலு.

No comments :

Post a Comment