சந்தானத்திற்கு 2.5 கோடியில் வீடுகட்டிக் கொடுத்த தயாரிப்பாளர்
சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தயாரிப்பது பிவிபி சினிமா நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜீவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் நிறுவனம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.
அதில் ஒன்றுதான் சினிமா தயாரிப்பு. ராஜபாட்டை, நான் ஈ, ஆயரத்தில் ஒருவன் உள்பட இதுவரை 7 படங்களை தயாரித்திருக்கிறோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 8வது படம். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய சூப்பர்ஹிட் படமான மரியாதை ராமண்ணாவின் தமிழ் உரிமத்தை நாங்கள் வாங்கி வைத்திருந்தோம்.
அதனையே இப்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் தயாரித்து வருகிறோம்.
சந்தானம் பர்ட்ஸ் காப்பி அடிப்படையில் தயாரித்து தருகிறார். இது ஒரு பேமிலி எண்டர்டயிண்மெண்ட் காமடி படம்.
ஒரு பாடல் காட்சி தவிர மற்ற பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. மும்பை மாடல் அழகி அஷனா ஜவேரி ஹீரோயினாக நடிக்கிறார்.
படத்தின் கதையில் சந்தானத்தின் வீடு முக்கியமானதாக இருக்கும். பூந்தமல்லி ரோட்டில் உள்ள ஈவிபி தீம்பார்க்கில் 2.5 கோடி செலவில் சந்தானத்தின் வீட்டை செட்போட்டு படமாக்கினோம்.
சந்தானம் சைக்கிளில் மினரல் வாட்டர் சப்ளை செய்பவராக நடிக்கிறார்.
அதிக பலம் இல்லாத சந்தானம் தன் வீட்டிற்கு வரும் ஆபத்தை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மே 9ந் தேதி வெளிவருகிறது. அதற்கு முன்னதாக ஏப்ரல் 14ந் தேதி பாடல்களை வெளியிடுகிறோம்.
பாடல் வெளியீட்டு விழாவில் எஸ்.எஸ்.ராஜமவுலிலியும், ஷங்கரும் கலந்து கொள்கிறாஇந்தப் படத்திற்கு பிறகு பிவிபி நிறுவனம் பெரிய ஹீரோ ஒருவர் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும். என்றார்ர்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment