கோச்சடையானுக்காக தெலுங்கிலும் பின்னணி பாடிய லதா ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினி பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஏராளமான பக்தி பாடல்களை பாடியிருக்கும் அவர், கமல் நடித்த டிக் டிக் டிக் என்ற படத்தில் நேற்று இந்த நேரம் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கடவுள் உள்ளமே உள்பட பல பாடல்களை சினிமாவிலும் பாடியிருக்கிறார்.
இதில் கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே என்ற பாடல் இன்றுவரை கருணை இல்லங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கோச்சடையான் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் லதா ரஜினி.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அவர் பாடியுள்ள மணப்பெண்ணின் சத்தியம் என்ற அந்த பாடலுக்கு ஏராளமான லைக் வந்து கொண்டிருக்கிறதாம்.
மேலும், இதே பாடலை தெலுங்கில் பாடுவதற்கு வேறு பின்னணி பாடகி தேடியபோது, தெலுங்கிலும் நானே பாடுகிறேன் என்று ஆர்வத்துடன் கேட்டு வாங்கி பாடியிருக்கிறாராம் அவர்.
தமிழில் பாடியதைப்போலவே தெலுங்கிலும் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளாராம் லதா ரஜினிகாந்த். இதையடுத்து, தனது அம்மாவின் குரல் இனிமையாக இருப்பதால், இனி தொடர்ந்து சினிமாவில் பாட வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டுள்ளாராம் கோச்சடையான் டைரக்டர் செளந்தர்யா அஸ்வின்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment