காஜல் அகர்வாலுக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி
இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. அப்போதே 25 லட்சம் அட்வான்ஸ் பணத்தையும் காஜல் அகர்வாலிடம் கொடுத்தனர்.
அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாரா உடன் உதயநிதிக்கு நல்ல கெமிஸ்ட்ரி உண்டானது. அதன் காரணமாக, நண்பேன்டா படத்தின் கதாநாயகி வாய்ப்பை நயன்தாராவுக்கு வழங்கிவிட்டார்.
நண்பேன்டா படத்தில் வரும் ஹீரோயின் கேரக்டருக்கு காஜல் அகர்வாலை விட நயன்தாராதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அப்படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் சொன்னதால்தான் கதாநாயகி மாற்றம் நடந்ததாக சொன்னார் உதயநிதி.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் காஜல் அகர்வால் கடுப்பாகிவிட்டார்.
ஆனால் தன் கடுப்பைக்காட்டிக் கொள்ளாமல் நண்பேன்டா படத்துக்கு தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை உதயநிதியிடம் திருப்பிக் கொடுக்க முன்வந்தார். ஆனால் உதயநிதி காஜலிடமிருந்து அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்க மறுத்துவிட்டாராம்.
பெரிய இடத்துப் புள்ளைங்களுக்கு 25 லட்சம் எல்லாம் பாக்கெட் மணிப்பா
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment