அதிர்ச்சி அணுகுண்டுகளை அள்ளி வீசிய தீபிகா படுகோனே!

No comments
கத்தி படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் டூயட் பாடுவதாக இருந்தது. ஆனால் அவர் கால்சீட் இல்லை என்று கைவிரித்ததையடுத்து, கோச்சடையான் தீபிகா படுகோனேவிடம் பேசினர். ஆனால், அவரோ, ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று அதிர்ச்சி அணுகுண்டுகளை அள்ளி வீசினாராம். 
 இதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அப்படக்குழுவினர் தெறித்து ஓடி வந்து விட்டனர். இதையடுத்து, மும்பை நடிகை என்று போனாலே அகலக்கால்தான் வைக்க வேண்டியதிருக்கும் என்று யோசித்து, விரலுக்கு ஏற்ற வீக்கமாய் தென்னிந்திய நடிகைகளையே புக் பண்ணுவோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். 
 அதையடுத்து, தற்போதைய நடிகைகளில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நடந்த பரிசீலனையில், வேலாயுதத்தில் விஜய்யுடன் நடித்த ஹன்சிகா, சுறாவில் நடித்த தமன்னா ஆகியோரின் பெயர்கள் முன்வரிசையில் உள்ளதாம். இவர்கள் இருவரில் ஒருவர் நடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

No comments :

Post a Comment