நான் சிகப்பு மனிதனில் உதட்டு முத்தக்காட்சியை நீக்கினால் யு சான்றிதழ்! தணிக்கைக்குழு திட்டவட்டம்!!

No comments
விஷால்-லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இரண்டாவது படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள உதட்டு முத்தக்காட்சிதான் கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் ஹாட் பீட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் பப்ளிசிட்டிக்காக கடைசி நேரத்தில் இந்த விசயங்களை அவுட் பண்ணினார்கள். ஆனால், இப்போது அதுவே படத்துக்கும் வினையாகி விட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில, அப்படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர், உதட்டு முத்தக்காட்சி இருப்பதால் யு/ஏ சான்றிதழ்தான் தர முடியும் என்று கூறினர். 
 அதையடுத்து, இது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போன்ற ஆபாச முத்தக்காட்சி இல்லையே. சாதாரண காட்சிதானே என்று விஷால்தரப்பு வாக்குவாதம் செய்தபோதும், அதை அதிகாரிகள் செவி கொடுத்து கேட்கவில்லை. அதனால், அதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு சென்றது விஷால் டீம். ஆனால் இப்போது அவர்களும் உதட்டு முத்தக்காட்சியை நீக்கினால் யு சான்றிதழ் தருகிறோம். 
இல்லையேல் யு/ஏ தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அடித்து சொல்லி விட்டார்களாம். ஆனால் அந்த முத்தக்காட்சியை நீக்கினால் படமே காலியாகி விடும் என்பதால், வேறு வழியில்லாமல் யு/ஏ சான்றிதழுடன் நான் சிகப்பு மனிதனை வெளியிடுகிறார்களாம்.

No comments :

Post a Comment