தெனாலிராமன் படத்தை தடை செய்ய தலைமை செயலாளரிடம் மனு
வடிவேலு, மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ள படம் கஜபுஜபல தெனாலிராமன். கல்பாத்தி சகோதரர்கள் தயாரித்திருக்கிறார்கள். யுவராஜ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் வடிவேலு மன்னர் கிருஷ்ணதேவராயகராகவும், தெனாலிராமனாவும் நடித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி தலைமை செயலாளரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: தெனாலிராமன் என்ற படத்தில் 16ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் என்ற மன்னன் வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
கிருஷ்ண தேவராயர் சிறந்த அரசாட்சியை வழங்கியவர், நீதி தவறாதவர், திராவிட மொழிகளை போற்றி வளர்த்தவர் அவரை காமெடியாக காட்டுவது அவரை அவமதிப்பதாகும். கிருஷ்ணதேவராயருக்கு 38 மனைவிகளும், 58 குழந்தைகளும் இருப்பது போன்று காட்டியிருக்கிறார்கள்.
வரலாற்று குறிப்புபடி அதில் உண்மை இல்லை.
கிருஷ்ணதேவராயரின் வரலாற்று படம் அல்ல என்று படத் தரப்பு மறுத்தாலும் படத்தின் கதையும் காட்சிகளும் அவரைத்தான் குறிப்பிடுகிறது. எனவே படத்தை வெளியிடும் முன் வரலாற்று ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், தெலுங்கு அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு போட்டுக் காட்டவேண்டும்.
அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும். முழு படமும் கிருஷ்ணதேவராயரை அவமதிக்கும் விதத்தில் இருந்தால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment