கோச்சடையான் வருமா? வராதா? புலம்பும் சிறுபடத் தயாரிப்பாளர்கள்

No comments
‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி படத்துறையில் பலவிதமான செய்திகள் உலா வருகின்றன. இன்னொரு பக்கம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரவர் இஷ்டத்துக்கு ஆளுக்கொரு வெளியீட்டு தேதியை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் காரணம்…கோச்சடையான் படத்தைத் தயாரிப்பவர்களோ, அப்படத்தை இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்தோ படத்தின் ரிலீஸ் தேதியை தெரிவிக்காமல் இருப்பதுதான். 
அதனால்தான் பலரும் ஆளுக்கு ஒரு தேதியை யூகங்களாக சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 11 அன்று கோச்சடையான் ரிலீஸ் என்று சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் தெரிவித்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். தற்போதைய சூழலில் அந்த தேதியில் கோச்சடையான் வெளிவர வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. 
 சில தினங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற ‘கோச்சடையான்’ ஹிந்தி பதிப்பின் டிரைலர் வெளியீட்டு விழாவில், படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. 
கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி தெரியாததினால், தாங்கள் பாதிக்கப்படுவதாக புலம்புகிறார்கள் படங்களை எடுத்து முடித்து விட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ள சிறு படத் தயாரிப்பாளர்கள். ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை வைத்தே தங்களின் படங்களின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யலாம் என இவர்கள் காத்திருக்கிறார்களாம்.
 ச்சடையான்’ வெளியீடு எப்போது என்று தெரியாத காரணத்தினால் எங்கள் படத்தையும் வெளியிட முடியவில்லை என்கிறார்கள்.

No comments :

Post a Comment