நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்.

No comments

பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது
தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பாக்யராஜுடன் சின்னவீடு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா (51). சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம்.

தெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு, இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். கடைசியாக இவர் சார்லி என்ற படத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் கடைசியாககாக்கிசட்டை படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக கல்பனா நடித்துள்ளார்.

'தனிச்சலா நிஜன்' என்ற மலையாள படத்தில் நடித்த கல்பனாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.No comments :

Post a Comment