நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருது! பெருமை அளிக்கிறது என்கிறார் சூப்பர் ஸ்டார்!

No comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், வாழும்கலை ஆசிரமத்தின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மற்றும் ராமோஜி ராவ், மறைந்த திருபாய் அம்பானி ஆகியோருக்கும் பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்னா நேவால், சானியா மிர்சா, நடிகர் அனுபம் கெர், பின்னணி பாடகர் உதித் நாராயணன், முன்னாள் மத்திய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜய் தேவ்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.

பத்ம விபூஷண் விருது பெருமை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் கருத்து

மத்திய அரசு அறிவித்த பத்ம விபூஷண் விருது தமக்கு பெருமை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசுத் தினத்துக்கு முன்பாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பத்ம விபூஷண் விருது அறிவிப்பால் பெருமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்.

என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

No comments :

Post a Comment