வறுமையில் வாடிய நடிகரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்த ஜெயலலிதா...

No comments

போன் வயர் கட்டாகி ரெம்பா நாள் ஆச்சு என்ற வசனத்தின் மூலம் பிரபலமான பசி நாராயணன் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கடந்த 1988-ம் ஆண்டு பசி நாராயணன் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரழந்தார்.

இவர் இறந்ததையடுத்து அவரது குடும்பம் வறுமையில் வாடியதாகவும், இதனால் அவர் வாங்கிய விருதுகள் அனைத்தும் விற்கபட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவரது இரண்டு மகள்களின் படிப்புகள் இடையில் நிறுத்தப்பட்டது.

இதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்,நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான பசி நாரயணன் குடும்பம் வறுமையில் வாழ்ந்து வருவதாக ஊடகங்கள் வழியாக தெரிந்து கொண்டேன்.

இதனால் அவரது குடும்பத்திற்கு முதலமைசர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது அவரது மனைவி வள்ளி பெயரில் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்படும்.இந்த வைப்பு நிதியில் இருந்து அவருக்கு வட்டி மூலம் மாதம் 8125 ரூபாய் கிடைக்கும் என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

No comments :

Post a Comment