கபாலி சரித்திர வெற்றி!. நன்றி தெரிவித்து ரஜினிகாந் அறிக்கை!
சென்னை: கபாலி படத்தின் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.
இதற்காக தயாரிப்பாளர் தாணு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களாக அமெரிக்காவில் ஓய்வெடுத்த ரஜினிகாந்த், கபாலி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிறகு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
தனது அமெரிக்கப் பயணம் மற்றும் கபாலி வெற்றி குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் வணக்கங்கள்.
லைகா தயாரிப்பில் திரு சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.O மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா ரஞ்சித் அவர்களின், புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும் இந்தியாவிலும் எடுக்கப்பட்ட கபாலி படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக உடம்புக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்பட்டது.
அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய புதல்வி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஓய்வு எடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணுக்குத் திரும்பிய எனக்கு, கபாலி படத்தின் மிகப் பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.
இப்படத்தைத் தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி இயக்கிய பா ரஞ்சித் அவர்களுக்கும் அவருடைய குழுவினர் அனைவருக்கும் சக நடிக நடிகையர்க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும், முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி..
ரஜினிகாந்த்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment