கபாலி குறித்து விஜய் சொன்னது என்ன?

No comments

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத்தில் உள்ளவர்களும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு எடிட்டிங் பணியை மேற்கொண்ட பிரவீன் கே.எல்., சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அவரிடம் விஜய் ‘கபாலி’ படம் எப்படி வந்திருக்கிறது என்று விஜய் ஆர்வத்துடன் கேட்டாராம். அதற்கு பிரவீன், ரொம்பவும் சூப்பராக வந்துள்ளது. தளபதி, பாட்ஷாவைவிட ஒருபடி மேலே இருக்கும் என்று கூறினாராம்.

இதைக்கேட்டு வியந்துபோன விஜய், “தலைவர் படம்னா சும்மாவா... கண்டிப்பா நல்லா வரும்...’ என்ற கூறியுள்ளார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரவீன் கே.எல்., தெரிவித்தார். விஜய்யும் ‘கபாலி’ படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பது இதிலிருந்து தெரிகிறது.

No comments :

Post a Comment