கார்த்தி நடிப்பில்................‘காஷ்மோரா’. ..............
கார்த்தி நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் சரித்திர பின்னணியில் உருவாகி வருகிறது. இப்படத்தில் நயன்தாரா-ஸ்ரீதிவ்யா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டப்பிங், கிராபிக்ஸ், எடிட்டிங் என இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் அனைத்தையும் அவர் முடித்துக் கொடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மற்றவர்களின் டப்பிங் பணிகளும் கூடிய விரைவில் முடிந்துவிடும் என தெரிகிறது. இப்படத்தை படக்குழுவினர் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என தெரிகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அமைந்துள்ள பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் விநியோகஸ்தர் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment