அமிதாப்பச்சன் சிறந்த பாலிவுட் நடிகராக தேர்வு

No comments
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், பழம்பெரும் நடிகருமான அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இங்கிலாந்து நாட்டில் வெளிவரும் ஆசிய வாராந்திரப் பத்திரிகை  'இந்தியாவின் சிறந்த 100 பாலிவுட் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் அமிதாப்பச்சன் விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலக சகோதரர்கள் போன்ற ஏராளமானவர்களின் வாக்குகளைப் பெற்று முதல் இடம் பிடித்தார்.

இவர் சிறந்த பல திரைப்படங்களில் நடித்ததுடன், தனது நடிப்பிற்காக விருதுகள் பலவற்றையும் வாங்கிக் குவித்துள்ளார். தன்னுடைய 40 வருட திரைவாழ்வில் ஷோலே, தீவார் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களில் அபிதாப்பச்சன் நடித்துள்ளார்.

இதுதவிர இவர் நடத்திய 'குரோர்பதி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதோடு பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றது.

லண்டனில் உள்ள மேடம் டுஸ்ஸாட் மியூசியத்தில் பிரபலமானவர்களின் மெழுகுச்சிலை உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பாலிவுட்டின் முதல் நட்சத்திரமாக அமிதாப் பச்சனின் மெழுகுச் சிலை இடம்பெற்றுள்ளது. அதேபோல் கடந்த 2012-ம் ஆண்டில் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றவர் என்ற பெருமையையும் அவருக்கு உள்ளது.

சமூக ஊடகங்கள், பாக்ஸ் ஆபீஸ் புள்ளி விபரங்கள், சினிமா தாக்கம் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டு போன்றவை மூலம் இவர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதுபெரும் நடிகரான திலிப் குமார் இரண்டாவது இடமும், ஷாருக்கான் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவிக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது. மேலும், சல்மான் கான்-11, அமீர்கான்-14, தர்மேந்திரா- 15, ஹேமா மாலினி -18, மதுபாலா -24, கஜோல் -30, ஹிரித்திக் ரோசன் -32, ராணி முகர்ஜி -38, கரீனா கபூர் -43, பிரியங்கா சோப்ரா -86, கேத்ரீனா கைப் - 93 ஆகிய இடங்களில் உள்ளனர்.

No comments :

Post a Comment