யாழில் இருந்து வெளிவரும் நெடுந்தீவு முகிலனின் ஒரு மாறுபட்ட படைப்பு - ''பால்காரன்''(Video)

No comments
'தண்ணீர்'  'வெள்ளை பூக்கள்'  'சாம்பல்' 'தோட்டி' போன்ற குறும்படங்களை இயக்கிய நெடுந்தீவு முகிலனின் ஒரு மாறுபட்ட படைப்பாக ஈழத்தில் இருந்து வெளிவருகின்றது

பால்காரன் குறும் படம் காலத்தின் தேவை கருதி பாலினை குறியீடாக கொண்ட இக்குறும்படம் சிறந்த தொழிநுட்ட தரத்தோடு யாழ்ப்பாணத்தில் தயாராகிவருகின்றது.

 'பால்காரனாக' பேராசிரியர் சிவச்சந்திரனின் மகன் பாரதி அறிமுகமாகின்றார் 'தோட்டி' குறும்படத்தில் நடித்த சுபி அர்யுன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள் 'சாம்பல்' 'தோட்டி' குறும்படங்களின் படப்பிடிப்பாளர் யசிதரன் ஓர் காட்சியில் நடிக்கிறார் இவர்களோடு இன்னும் பலர் இக்குறும்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 திரையரங்கு - மரணவீடு - ஆலயங்கள் - மாட்டுத்தொழுவம் கடைத்தெரு என பல பகுதிகள் படப்பிடிப்புக்குள் உள்வாங்கப்பட்டு 'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்' என்பதை நிலைநாட்ட யாழ்மண்ணில் பிரமாண்டாக தயாராகி வருகின்றது.

 படப்பிடிப்பாளராகவும் படதொகுப்பாளராகவும் மாஸ் சுரேன் பணியாற்றுகிறார் யாழில் வெளிவந்த சிறந்த குறும்டங்களுக்கு இசை அமைத்த அற்புதன் இப்படத்துக்கு இசைஅமைக்கிறார் adlerblick Kethees.படத்தினை தயாரிக்கின்றார்.

 இவர்களின் முயற்றி வெற்றி பெறவும் தாய்மண்ணில்இருந்து வரும் படைப்புக்களை ஊக்குவிக்கவும் எமது புலம்பேர் சமுதாயம் ஒத்துளைப்பை வழங்கும் என்ன எதிர்பார்க்கின்றோம்ம் பால்காரன் குறும்படத்தின் முன்னோட்டம் உங்களுக்காக.

No comments :

Post a Comment