என் தோற்றத்தை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்:மனிஷா கொய்ராலா

No comments
சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கிறங்கடித்த நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் அவரது அழகை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூட சொல்லலாம்.


ஆனால், இப்போதோ அவர் ஆளே உருமாறி இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை கசந்ததால், விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தார். இதனால், மனரீதியாக பாதிக்கப்பட்ட அவருக்கு, உடல் ரீதியாகவும் சோதனை வந்தது. புற்று நோயால் தாக்கப்பட்ட அவர், மரணத்தின் விளிம்பிற்கே சென்று மீண்டு வந்தார். அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற அவர், தற்போது அவரது தோற்றத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தனது தலைமுடியை இழந்து, கண்ணாடி அணிந்தது போலுள்ள அந்த படத்தில், அவர் மிகவும் வயதான பெண் போல தோற்றமளிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, என் தோற்றத்தை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன்.


 கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. என்னுடைய நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என்றார். இதன் மூலம், மனிஷா கொய்ராலா மற்ற நடிகைகளுக்கு மட்டும் உதாரணமாக இல்லாமல், பெண் இனத்திற்கே தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளார்.

No comments :

Post a Comment