எனக்கு சரியான கமெடி நடிகர் சிவகார்த்திகேயன் தான் – தனுஷ் பேட்டி

No comments
கோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாவில் ரவுண்டுகட்டி கலக்கி வரும் நடிகர் தனுஷ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தன்னுடன் நடித்த நடிகர்கள், தன்னுடைய படங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.



அதில் சினிமா தான் தன்னை வாழ வைத்த தெய்வம் என்றும் தன்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய அண்ணன் செல்வராகவன்தான் தன்னுடைய அப்பா என்று கூறினார்.

மேலும் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிளலித்தார் தனுஷ்,


கேள்வி: காமெடியில் உங்களுக்கு ஏற்ற ஜோடி நடிகர் யார்?


பதில்: 3 படத்தில் ந‌ண்பராக நடித்த சிவகார்த்திக்கேயன் தான் காமெடியில் எனக்கு ஏற்ற ஜோடி. அவர் ஹீரோவானது ஒருபுறம் சந்தோசம் என்றாலும் நிறைய வருத்தம்தான். ஒரு நல்ல காமெடியனை மிஸ்பண்ணிட்டேன். அவர் காமெடியனாகவே இருந்திருந்தால் எனக்கு சரியான ஜோடி அவர்தான்.


கேள்வி: நீங்கள் பெரும்பாலும் நிகழ்சிகளில் கவுண்டமணிதான் என்னுடைய‌ தலைவர் என்று சொல்லியுள்ளிர்கள் அது பற்றி?


பதில்: எனக்கு கவுண்டமணியின் காமெடி ரொம்ப பிடிக்கும். அவர் சினிமா முகமோ, டிவி முகமோ கிடையாது. நம்மில் ஒருவராக இருப்பார். அதுதான் அவரது வெற்றி. அவருக்கான கதையை தயார் செய்துகொண்டு கண்டிப்பாக அவர் முன்னால் போய் நிற்பேன். அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் இதுவரை இரண்டு பேருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒருவர் இளையராஜா மற்றொருவர் கவுண்டமணி.


கேள்வி: உங்களை மிகவும் கவர்ந்த பாடல் வரி?

பதில்: கும்கி படத்தில் காதலியை பார்க்கும் போது எப்படி தோன்றுகிறது என்பதை சொன்ன வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நூறு கோடி வானவில் மாறி மாறி தோன்றுதே.... ஒரு காதலியின் முகத்தை இதைத் தவிர அழகாய் யாராலும் வர்ணிக்க முடியாது.


கேள்வி: பாடுவது பற்றி?

பதில்: நான் இதுவரை யாரிடமும் பாட்டு கற்றுக் கொண்டதில்லை. ஏதோ எனக்கு தெரிந்ததை பாடுகிறேன். அதை இசையமைப்பாளர்கள் சரிசெய்து கொள்கின்றனர்.


கேள்வி: கதையின் நாயகனாக இருக்க விருப்பமா? அல்லது கதாநாயகானக இருக்க விருப்பமா?


பதில்: எனக்கு அமையும் படங்களை பொறுத்தே அதை சொல்ல முடியும் இரண்டுமே விருப்பந்தான், ஆனால் என் அண்ணனுக்கு நான் கதையின் நாயகனாக இருக்கத்தான் பிடிக்கும் ஆனால் என்னக்கு அப்படி இல்லை எல்லாவிதாமன படங்களும் பண்ணவேண்டும் என்று ஆசையாக உள்ளது.


கேள்வி:டாக்டர், சாப்ட்வேர் எஞ்ஜினியர்களை விட சினிமாக்காரர்கள் உயர்ந்தவர்களாக சித்தரிக்கப்படுவது பற்றி?


பதில்: டாக்டர், சாப்ட்வேர் எஞ்ஜினியர், மாதிரி நாங்களும் சராசரி மனிதர்கள்தான். சினிமாக்காரர்கள் ஸ்பெசல் கிடையாது. எங்களுக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள்தான் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் காட்டுகிறது. நாங்கள் என்ன செய்தாலும் அது பிரபலமாகிவிடுகிறது.


கேள்வி:கிசு கிசுக்கள் படிப்பதுண்டா?


பதில்: ஊடகங்களில் வரும் கிசுகிசுக்களை நான் படிப்பதில்லை. என்னைப் பற்றிய கிசுகிசுவை படித்துவிட்டு சொன்னால் அப்படியா என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவேன். அதை நான் கண்டு கொள்வதில்லை.


கேள்வி:நீங்கள் உடுக்கும் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரை பின்பற்றுவதாக கூறப்படுகிறது அது பற்றி?


பதில்: நான் தமிழன் தமிழனின் பாரம்பரிய உடை வேட்டி சால்வைதான், எனக்கு பொருத்தமான உடையும் வேட்டி சால்வைதான் அதனால் தான் உடுத்திவருகிறேனே தவிர மற்றும் படி ரஜினி சாரை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது என்றார்.

No comments :

Post a Comment