தனது தம்பியை கொலை செய்ய முயன்ற நடிகை

No comments
சென்னை: தனது புத்தகத்தில் தனது தம்பியை கொலை செய்ய முயன்றதாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை நவ்யா நாயர்.கேரளத்திலிருந்து ராதா மோகனின் அழகிய தீயே படம் மூலம் கோலிவுட் வந்த அழகி கிளி நவ்யா நாயர். அவர் மாயக் கண்ணாடி, ராமன் தேடி சீதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயான அவர் தனது வாழ்க்கை சுய சரிதை குறித்து ஒரு புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்.


நவ்யா ரசங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் அவர் அதிர்ச்சி அளிக்கும் ஒரு சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார். சிறு வயதில் பெற்றோரின் அன்பை பெற பிள்ளைகள் போட்டி போடுவது சகஜம்.


அப்படி தான் நவ்யாயும் தனது பெற்றோரின் அன்பை பெற தன்னுடைய தம்பியுடன் போட்டி போட்டுள்ளார். அந்த போட்டியால் தம்பி மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கே இதுவரை தெரியாமல் இருந்ததாம்.

No comments :

Post a Comment