நானிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்
நான் ஈ புகழ் நானிக்கு சிறுவயதிலிருந்தே உலகநாயகன் கமல்ஹாசன் என்றால் கொள்ளை பிரியமாம். இதனால் தனது வாழ் நாளில் கமல்ஹாசணை ஒரு தடவையாவது சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. நானி ஒரு நடிகராக உருவான பிறகு, தனது ரோல்மாடலாக நினைத்தது கமல்ஹாஸனைத்தான். அப்போதும் கூட கமலைச் சந்திக்கும் வாய்ப்பு நானிக்கு அமையவில்லை.
இந்நிலையில் நானியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிவைத்துள்ளார் கமல். அதாவது சமீபத்தில் ஹைதராபாதில் யாஷ்ராஜ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நானிக்கு, பக்கத்து ப்ளோரில் கமல்ஹாஸன் தன் விஸ்வரூபம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் தகவல் தெரிந்தது.
இதுதான் கமலைச் சந்திக்க சரியான சமயம் என்று முடிவு செய்து, அனுமதி கேட்டார் நானி. உடனே வரச் சொன்ன கமல், நானியை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.
அதுமட்டுள்ள, தன்னுடன் நடித்துக்கொண்டிருந்த நாயகிகள் பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருக்கும் நானியை அறிமுகப்படுத்தியதோடு, சிறிது நேரம் நானி நடிக்கும் படங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தாராம். அவரது இந்த அன்பும் உபசரிப்பும் பேச்சும் தனக்கு வானில் பறப்பது போன்ற உணர்வைத் தந்ததாக நானி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment