அஜித்திடம் மனம் திறந்த லட்சுமி ராய்
அஜீத்திடம் என் சொந்த விடயங்களை பகிர்ந்து கொள்வேன் என்று மனம் திறக்கிறார் நடிகை லட்சுமி ராய். நடிகை லட்சுமி ராய் மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அஜித்துடன் இணைந்து நடித்தார்.தன்னுடைய திரையுலக அனுபவம் குறித்து அவர் கூறுகையில், எனது 15 வயதில் நடிக்க வந்துவிட்டேன்.
ஆரம்ப காலத்தில் கொமரா முன் நிற்பதற்கு பயப்படுவேன். ஆரம்பத்தில் காதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிப்பதில் குழப்பம் இருந்தது. தற்போது கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொண்டேன்.
மேலும் மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்தேன். அவர் எளிமையானவர் மட்டுமல்ல ஈடுபாடுடன் நடிப்பவர்.
என்னுடைய சொந்த அனுபவங்களையும், வாழ்க்கை விஷயங்களையும் அவரிடம் பகிர்ந்து கொள்வேன் என்றும் திரையிலும், திரைக்கு பின்னாலும் அவருடன் நட்பாக பழகுவேன் எனவும் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment