எனக்கு புற்று நோயும் இல்லை நான் இறக்கவும் இல்லை: கனகா நேரில் பேட்டி Video (2ம் இணைப்பு) !

No comments
பிரபல நடிகை கனகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி இன்று கேரளாவில் மரணமடைந்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த செய்தி அனைத்து தரப்பினரிடமும் காட்டுத் தீ போல் பரவியது. இதனை அறிந்த கனகா பெரும் அதிர்ச்சியடைந்தார். தான் உயிருடன் இருக்கும்போதே இவ்வாறு வதந்திகளை பரப்பியவர்கள் மீது கோபமடைந்தார்.

பின்னர் இதுதொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,

‘எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னை கேட்காமலேயே உடல்நிலை சரியில்லை என்று வதந்தி பரப்பியுள்ளனர். ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வந்ததாக வந்த தகவலும் தவறு. யாரோ சிலர் என்னைப் பற்றி வதந்தி பரப்பி உள்ளனர். என்னை தொடர்புகொண்டு யாரும் விளக்கம் கேட்க முயற்சிக்காதது வருத்தமளிக்கிறது’ என்றார்.

கனகா பத்திரிகையாளர்களுக்கு நேரில் பேட்டியளித்திருப்பதன் மூலம் அவரைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கனகா இறந்ததாக செய்தி பிரசுரித்ததை இட்டு வருந்துகிறோம் இந்திய இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியானதை தொடர்ந்தே எமது இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டது  இது பற்றி உண்மை நிலையினை ஆராய முற்பட வில்லை எனவே நடிகை  கனகா நீண்ட  நாள் வாழ வாழ்த்துகின்றோம்


சினிமா  பிரிவு 


காணொளி பார்க்க 

No comments :

Post a Comment