காலில் பட்ட காயத்துக்கு ஆபரேஷன்: ஒரு வருடம் ஓய்வு எடுக்கிறார் அஜீத்

No comments
காலில் பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ய உள்ளார் நடிகர் அஜீத். இதனால் ஒரு வருடம் ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்து வருகிறார் அஜீத்.

சில மாதங்களுக்கு முன் துபாயில் சண்டை காட்சி படமானபோது, அவரது கால் தவறுதலாக வேகமாக சென்ற கார் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் பலத்த காயம் அடைந்தார். இதற்காக தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து நடித்தார்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனாலும் வலியை பொறுத்துக்கொண்டு ஷூட்டிங் முடித்துக்கொடுத்திருக்கிறார். இதையடுத்து சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜீத். 60 சதவீதம் ஷூட்டிங் முடிந்திருக்கிறது. இப்படத்தையும் முடித்துவிட்டு அடுத்து புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் ஒரு வருடம் ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறார்.

அப்போது காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். காலில் வலியுடன் நடித்து வருகிறேன். அதற்கான சிகிச்சை பெற உள்ளேன். இதற்காக 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஓய்வு தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். அதன் பிறகு புது கதைகள் கேட்டு, எனக்கு பொருந்தும் வேடத்தை தேர்வு செய்து நடிப்பேன் என்றார் அஜீத்.

No comments :

Post a Comment