கௌதமை விடாமல் துரத்தும் த்ரிஷா

No comments
கௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார் நடிகை த்ரிஷா.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவரி கொடுத்தவர் கெளதம்மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களை வாரிக்கொண்டார்.ஆனால் அதன் பின்பு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந்ததால் த்ரிஷாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது.

இந்நிலையில் பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்றபோதிலும் அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லையாம்.

அதனால் சூர்யாவைக் கொண்டு கெளதம் மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் இணைந்து விடலாம் என்று நினைத்த போது கதை விடயத்தில் விவகாரம் ஏற்பட்டதால் வாய்ப்பு நழுவியது.

இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து கௌதம் ஒருபடம் இயக்க போவதாகவும் தவகல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த படங்களிலாவது புகுந்து விடலாம் என்று கெளதமை விடாமல் துரத்தி வருகிறாராம் த்ரிஷா.

No comments :

Post a Comment