வருகின்ற 9ம் திகதி பிறந்த நாளில் 22 குழந்தைகளோடு 23வது குழந்தையும் தத்தெடுக்கவுள்ள ஹன்சிகா!

No comments
நடிகை ஹன்சிகா மோத்வானி மற்ற நடிகைகளை விட அதிகமாக பணம் சம்பாதித்து முன்னணி நடிகையாக உள்ளார். ஆனால் அதற்கான திமிரு ஏதுமின்றி இயல்பாகவும், இரக்க குணம் கொண்டவராக திகழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நடிகை ஹன்சிகாவுக்கு வருகின்ற 9ம் திகதி 21 வயது நிறைவடைந்து 22வது வயது பிறக்கிறது. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். கடந்த பிறந்த நாளின் போது அவர் 2 குழந்தைகளை தத்து எடுத்தார்.

 இதுவரை 22 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்து வருகிறார். இந்த குழந்தைகளானது மும்பையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருகின்றன. அவர்களுக்கான அத்தனை செலவுகளும் இவரே ஏற்கிறார்

. இந்நிலையில் வருகின்ற பிறந்த நாளையொட்டி இன்னொரு குழந்தையையும் தத்தெடுக்க உள்ளார். இது அவருடைய 23வது தத்து குழந்தையாகும்.


No comments :

Post a Comment