இலங்கை பிரச்சனையை சித்தரிக்கும் மெட்ராஸ் கபே

No comments
இலங்கைப் பிரச்சனையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் மெட்ராஸ் கபே.

இதில் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார், இப்படம் தமிழிலும் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் கதை இலங்கை சம்மந்தப்பட்டது என்பதால் அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது.

 ஈழத்தமிழர்களை தவறான விதத்தில் சித்தரித்திருப்பதாக கூறி, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 மேலும் படம் வெளியாவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஊடகனத்திரை சந்தித்து பேசிய நடிகர் ஜான் ஆபிரகாம் இந்தப் படத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை. நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்தப் படத்தின் கதையை படமாக்கியுள்ளோம்.

மனமும் புண்படும் விதமாக இந்தப் படம் அமையாது. இலங்கையில் நடந்த விடயங்களை காண்பித்திருக்கிறோமே தவிர அதை ஆதரிப்பதாகவோ, எதிர்ப்பதாகவோ படத்தில் எந்த கருத்தையும் நாங்கள் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment