பிசினஸ்மேனை காதலிக்கவில்லை: லட்சுமி ராய்
‘என் பாய்பிரண்ட், பிசினஸ்மேன் இல்லை’ என்கிறார் லட்சுமிராய். இதுபற்றி அவர் அளித்த பேட்டி: பெங்களூர் பெண்ணாக இருந்தாலும் கன்னடத்தில் ஒரு சில படங்கள்தான் நடித்திருக்கிறேன். அதுவும் எனது குடும்பம், நண்பர்கள், ரசிகர்களுக்காகவே அந்த படங்களை ஏற்றுக்கொண்டேன்.தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மார்க்கெட் நன்றாக இருக்கிறது. தற்போது உடல் எடையை கடுமையான உடற்பயிற்சி செய்து குறைத்திருக்கிறேன். இவ்வளவு கிலோ குறைந்துவிட்டேனா என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.
ஆனால், ஒருபோதும் ஒல்லிபிச்சானாக மாட்டேன். மீடியாக்களும், பத்திரிகைகளும் என்னைப் பற்றி நிறைய எழுதுகின்றன. சரியோ, தவறோ எல்லாமே பப்ளிசிட்டிதானே என்கிறார்கள். அதைவிட என் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறைதான் இதற்கு காரணம். எனது நீண்ட கால பாய்பிரண்ட் ஒரு பிசினஸ்மேன் என்று பரபரப்பாக எழுதினார்கள்.
அவர் பிசினஸ்மேன் இல்லை. எங்களுடைய நட்பு அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் நேரத்தில் தான் இதுபற்றி என்னால் சொல்ல முடியும். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது 100 சதவீதம் சரியாக வந்த பிறகுதான் உறுதி செய்வேன். நான் விரும்பினாலும் அதை கடவுள் விரும்பாத பட்சத்தில் எல்லாம் தவறாகி விடக்கூடாது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment