ரம்யாவின் பாட்டு ஆர்வம்

No comments
நடிப்பதைவிட பாட்டு பாடுவதில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளார் ரம்யா நம்பீசன். ‘பீட்சா’, ’குள்ளநரி கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன்.

 அவர் கூறியதாவது: ‘பீட்சா’ வெற்றிக்கு பிறகு தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. அதேபோல் மலையாளத்திலும் நிறைய கதைகள் கேட்டு வந்தேன். தமிழ், மலையாளம் இரண்டிலும் சமமாக நடிக்க எண்ணினேன். இதற்கு காரணம் தமிழில் குடும்ப பாங்கு, மலையாளத்தில் ஸ்டைலான ஹீரோயின் என வெவ்வேறு இமேஜ் இருந்தது.

தமிழில் எனது அடுத்த படமாக ‘ரெண்டாவது படம்’ வெளியாக உள்ளது. விரைவில் பெரிய பட நிறுவனம் ஒன்றில் நடிக்க உள்ளேன். அதற்கான அறிவிப்பை அந்நிறுவனமே தெரிவிக்கும். அதுவரை அந்த வேடம் பற்றி எதுவும் சொல்ல முடியாது.

படங்களில் பின்னணி பாடுவது பற்றி கேட்கிறார்கள். ‘ரம்மி’ படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறேன். குழந்தை பருவம் முதலே கர்நாடக இசை கற்றிருக்கிறேன். அதனால் பாடுவதில் விருப்பம் இருந்து வந்தது. தற்போது நடித்து வரும் படங்கள் முடிந்த பிறகு பாடுவதில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.


No comments :

Post a Comment