ஹீரோக்களுக்கு ஈகோ இருக்கக்கூடாது
ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன், ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரிக்கும் படம், ‘ராஜா ராணி’. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் நடித்துள்ளனர். அட்லீ இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்கும்போது அந்த படத்துக்கு அந்த ஹீரோதான் பலமான தூண். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை ஹீரோக்களுக்கு படத்தின் மீது பொறுப்பு இருக்கிறது.ஈகோவால் அதை தட்டிக் கழிக்கக் கூடாது. புரமோஷனுக்கு அவர்கள் உதவ வேண்டும். ஒரு ஹீரோ வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அந்த ஹீரோவுக்காக இயக்குனர் சிங்கிள் ரூமில் உட்கார்ந்து கதை எழுதுகிறார். தயாரிப்பாளரிடம் சொல்லி, ஒப்புதல் பெற்று, நடிகர்களை சம்மதிக்க வைத்து ஷூட்டிங் சென்று பிறகு டப்பிங், இசை, புரமோஷன், ரிலீஸ் என அந்த இயக்குனரின் பணி நீண்டது. ஆனால் ஹீரோக்கள் பாதி படத்தில் நடிக்க வருகிறார்கள்.
அது முடிந்ததும் அடுத்த படத்தில் நடிக்கச் சென்று விடுகிறார்கள். கேரள கலைஞர்கள் அப்படியில்லை. தாங்கள் நடித்த படம் ரிலீசாகும் வரை அந்தப் படத்தோடு இருக்கிறார்கள். அதற்காக உழைக்கிறார்கள். அந்த மாதிரியான சூழ்நிலை இங்கும் வந்தால்தான் சினிமாவுக்கு நல்லது. இவ்வாறு அவர் பேசினார். ஃபோக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் விஜய் சிங், யுடிவி தனஞ்செயன், சி.வி.குமார், நா.முத்துகுமார், பா.விஜய், பாண்டிராஜ், மகிழ்திருமேனி, ஆர்யா, ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment