பெரிய ஹீரோக்கள் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இல்லை: அமலா பால் பேட்டி

No comments
பெரிய ஹீரோக்கள் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது என்று சொல்கிறார் அமலா பால். இது பற்றி அவர் கூறியதாவது: மலேசியாவில் நடந்த தெய்வத் திருமகள் ஷூட்டிங்கின்போது, மற்றொரு கதையை என்னிடம் கூறினார் இயக்குனர் விஜய். அதில், ஹீரோயினை நடனத்தில் கைதேர்ந்தவராகவும், போலீஸ் அதிகாரியாகவும் சித்தரித்திருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தெரிவித்தார். போலீஸ் வேடத்தில் என்னை நடிக்க கேட்டார். அந்த நேரத்தில் கைவசம் கால்ஷீட் இல்லாததால் வருத்தப்பட்டேன். ஆனால், ஷூட்டிங் தள்ளிப்போனது.

 இதற்கிடையில், கால்ஷீட் தரும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. உடனே அந்த படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டேன். ஷூட்டிங்கின்போது ஹீரோ விஜய் எனக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பெரிய ஹீரோக்கள் படங்கள் என்றால் ஹீரோயின்களுக்கு அதிக வேலை இருக்காது. காட்சி பொருளாக மட்டுமே வருவார்கள்.

இந்த படத்தில் ஹீரோயினுக்கு நிறைய வேலை இருந்தது. ‘பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதைவிட புதுமுக ஹீரோவுடன் நடிப்பது ஈஸியா’ என்று கேட்கிறார்கள். அப்படி என்னால் சொல்ல முடியாது. பெரிய ஹீரோக்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் காட்சிகள் விரைவாக படமாகும்’ என்றார்.No comments :

Post a Comment