சித்தார்த் நடிக்கும் வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’!

No comments
தீயா வேலை செய்யனும் படத்துல, தீயா வேலை செஞ்சவரு நம்ம சித்தார்த்.  தமிழ் சினிமாவுக்கு விட்ட இடைவெளியை குறைக்கனும், சொந்த மண்ணுல ’தம்பி நீ யாரு?’ அப்படின்னு கேட்டுடக் கூடாது என, டிரான்ஸ்ஃபர் ஆகி வந்தவர் வரிசையா உதயம் NH4, தீயா வேலை செய்யனும் குமாரு என இரண்டு வெற்றிப் படத்தை கொடுத்துட்டார்.

இரண்டு படங்களும் இரண்டு விதமான படம், தொடர் வெற்றி என கால்குலேஷன் போட்டு இனி ஒரே சமயத்துல இரண்டு விதமான படத்துல நடிச்சு ஒரே சமயத்துல வெற்றி கொடுத்துடனும் என்ற முடிவுடன் பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா கதையை ஓகே செய்தார். அடுத்த கதைக்காக காத்திருந்த போது தான் வசந்தபாலனின் காவியத்தலைவன் ஸ்கிரிப்ட் சித்தார்த்தை தேடி வந்திருக்கிறது.

எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் தம்பதிகளின் வாழ்க்கையை விவரிக்கும் காவியத்தலைவன் திரைப்படத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட சித்தார்த்துக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளாக வந்து சேர்ந்திருக்கிறது.

'Y NOT' ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றால் சும்மாவா. கடுமையாக உழைத்து எப்படியும் மாபெரும் வெற்றி கொடுக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் சித்தார்த்.


No comments :

Post a Comment